கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவுக்கு கூடுதல் மருத்துவ உதவி வழங்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவுக்கு கூடுதல் மருத்துவ உதவி வழங்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-06-07 19:27 GMT
வாஷிங்டன்,

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையுடன் கடுமையாக போராடி வருகிறது. இதில் இந்தியாவுக்கு உதவும் விதமாக உலக நாடுகள் பலவும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஏராளமான மருத்துவ உதவிகளை வழங்கி உள்ளது.

இந்தநிலையில் இந்தியாவுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருத்தவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும்படி ஜனாதிபதி ஜோ பைடனை அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் மாகாண கவர்னர்கள் பலரும் வலியுத்தியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரெக் அப்போட் இதுபற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பேரழிவு தரக்கூடியது. இது ஜனாதிபதி ஜோ பைடனிடமிருந்து கூடுதல் நடவடிக்கை கோருகிறது. இந்த வைரசை எதிர்த்து போராட நமது மிக முக்கியமான உலகளாவிய கூட்டாளிகளில் ஒருவருக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கி உதவ வேண்டும்’’ என ெதரிவித்துள்ளார்,

குடியரசு கட்சியை சேர்ந்த செனட் சபை எம்.பி. டெட் குரூஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான நட்புநாடு. ஜோ பைடனின் தடுப்பூசி பகிர்வு திட்டம் குறைபாடுடையது. இந்தியா போன்ற நமது நட்பு நாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும், இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகள் அவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை ஜோ பைடன் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’’ என கூறினார்.

மேலும் செய்திகள்