ஆப்கானிஸ்தான்: கல்வி நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையத்தில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2022-10-01 15:39 GMT

Image Courtesy: AFP

காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரம் டஷ் - இ - பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் உள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் கூடி இருந்தனர்.

அப்போது, அந்த பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி திடீரென வெடிகுண்டை வெடிக்கச்செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் நேற்று 19 பேர் உயிரிழந்திருந்த நிலையில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கல்வி நிலையத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்