ஆன்மிகம்
மரங்களை நேசிப்போம்.. பூஜிப்போம்..

ஆதிகாலம் முதலே மக்கள் மரங்களோடு சம்பந்தப் பட்டவர்களாக வாழ்ந்தார்கள்.
ஆதிகாலம் முதலே மக்கள் மரங்களோடு சம்பந்தப் பட்டவர்களாக வாழ்ந்தார்கள். ஆதிவாசிகள் மரவுரி தரித்திருந்தனர். மாரியம்மன் வழிபாட்டில் வேப்ப இலை ஆடை இடம்பெறுகிறது. முனிவர்கள் மரப்பொந்துகளில் தவமிருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. மரத்தின் விதை, வேர், கொட்டை, கொழுந்து, பூ, காய், கனி, இலை, பட்டை, சருகு போன்ற அனைத்தும் மனித உயிர்களைக் காக்கும் சக்தியாக இருக்கின்றன. அரசும், வேம்பும் வழிபட உகந்த மரங்களாகும். அதன் அடியில் நாகம், விநாயகரை வைத்து தெய்வ வழிபாட்டையும் தாவர வழிபாட்டையும் முன்னோர்கள் மேற்கொண்டனர். அரச மரத்தில் மும்மூர்த்திகளும் இருப்பதாக ஐதீகம். வேர் பகுதியில் பிரம்மா, தண்டு பகுதியில் விஷ்ணு, கிளைப் பகுதியில் சிவன் இருப்பதால் அரசமரத்தைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளையும் கும்பிட்ட பலன் நமக்குக் கிடைக்கும்.