ஆன்மிகம்
ஆன்மிகத் துளிகள்

இல்லத்தரசி ஒரு மண் கலயத்தில் விதைகளை சேகரித்து வைத்திருப்பது போல், படைத்தலுக்கான விதைகளை பராசக்தி சேகரித்து வைத்திருக்கிறாள்.
படைப்பு

இல்லத்தரசி ஒரு மண் கலயத்தில் விதைகளை சேகரித்து வைத்திருப்பது போல், படைத்தலுக்கான விதைகளை பராசக்தி சேகரித்து வைத்திருக்கிறாள். உலகம் அழியும் போது, அதாவது மகா பிரளயம் ஏற்படும் வேளையில் இந்த சேகரிப்பு தேவைப்படுகிறது. படைப்பிற்குப் பிறகு, தான் பிரசவித்த உலகிற்குள்ளாகவே அன்னை தங்கு கிறாள்.

-ராமகிருஷ்ணர்.


தியானம்

சிலர் வந்தவுடனேயே ஞானியாக நினைக்கின்றனர். ஆனால் அதற்கான முயற்சியை அவர்கள் ஒதுக்கிவிடுகின்றனர். மோட்சத்திற்கு குறுக்குவழி ஏதாவது உண்டா என்ன? அது என்ன கடையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளா?. ஒருவர் தன்னை உணராத வரை சாதனை தேவை. சாதனைகள் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

-ரமணர்.


மனம்

நீங்கள் பற்றற்று இருங்கள். மற்றவை வேலை செய்யட்டும். இடையறாது வேலை செய்யுங்கள். ஓர் அலைகூட மனதை வெல்ல இடம் கொடுக்காதீர்கள். இந்த உலகிற்கு நீங்கள் அந்நியன் போலவும், வழிப்போக்கன் போலவும் வேலை செய்யுங்கள். ஆனால் உங்களைத் தளைகளுக்கு உள்ளாக்காதீர்கள். அவை அஞ்சத் தகுந்தவை.

-விவேகானந்தர்.