ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள்6-6-2017 முதல் 12-6-2017 வரை

சோழவந்தான் ஜெனக மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம், இரவு புஷ்பப் பல்லக்கில் அம்மன் வீதி உலா.
6-ந் தேதி (செவ்வாய்)

பிரதோஷம்.

சோழவந்தான் ஜெனக மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம், இரவு புஷ்பப் பல்லக்கில் அம்மன் வீதி உலா.

பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.

திருப்பத்தூர் திருத்தணி நாதர், காளையார்கோவில் சிவபெருமான், உத்தமர்கோவில் சிவபெருமான் தலங்களில் ரத உற்சவம்.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் காலை கன்றால் மேய்ந்த சேவை அருளல்.

சமநோக்கு நாள்.

7-ந் தேதி (புதன்)

வைகாசி விசாகம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பாலாபிஷேகம்.

பழனி முருகப்பெருமான் கோவிலில் ரத உற்சவம்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாண வைபவம்.

கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (வியாழன்)

முகூர்த்த நாள்.

மதுரை கூடலழகர் சமேத நாச்சியார்களுடன் ரத உற்சவம்.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்பக விமானத்தில் பவனி.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.

பழனி முருகப்பெருமான் தந்த பல்லக்கில் புறப்பாடு.

சமநோக்கு நாள்.

9-ந் தேதி (வெள்ளி)

பவுர்ணமி.

சோழவந்தான் ஜெனக மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு நாச்சியார் களுடன் சந்திர பிரபையிலும் பவனி.

பழனி முருகப்பெருமான் தங்கக் குதிரையில் புறப்பாடு கண்டருளல்.

சமநோக்கு நாள்.

10-ந் தேதி (சனி)

பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் சப்தாவரணம்.

மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் தசாவதாரக் காட்சி.

அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய தலங் களில் தெப்ப உற்சவம்.

கீழ்நோக்கு நாள்.

11-ந் தேதி (ஞாயிறு)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் தொடக்கம்.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.

மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.

சோழவந்தான் ஜெனக மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

12-ந் தேதி (திங்கள்)

குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் வருசாபிஷேகம்.

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ரத உற்சவம்.

திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெள்ளி ரதத்தில் புறப்பாடு.

சோழவந்தான் ஜெனக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

கீழ்நோக்கு நாள்.