ஆன்மிகம்
திருமண வரம் தரும் மாப்பிள்ளை சுவாமி

‘திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.
‘திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு கல்யாண சுந்தரர் என்று அழைக்கப்படும் மாப்பிள்ளை சுவாமி உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார். அவர் பாதத்தின் மேலே திருமால் அர்ச்சித்த கண்மலர் உள்ளது. இங்கு திருமண வீடுகளில் வைத்திருப்பது போல் அரசாணிக்கால் வைக்கப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து மாப்பிள்ளை சுவாமியை வழிபடுவதுடன், மாலை அணிந்தபடியே அரசாணிக்காலை மூன்றுமுறை வலம் வந்து கல்யாண சுந்தரரை வழிபட்டால் கல்யாணக் கனவுகள் நனவாகும்.