ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

கேரள மாநிலம், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரசினிக்கடவு என்ற ஊர். இங்கு முத்தப்பன் கோவில் இருக்கிறது.
கேரள மாநிலம், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரசினிக்கடவு என்ற ஊர். இங்கு முத்தப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில், முத்தப்பனின் வேட்டைக்கு உதவிய நாய்களே, புனித விலங்காகக் கருதப்படுகின்றன. கோவிலின் உள் வாசல் பகுதியில் இரண்டு நாய்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் முத்தப்பனின் பாதுகாவலர்கள் என்கின்றனர் பக்தர்கள். கோவில் வளாகத்தில் நாய்கள் அதிக அளவில் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கோவில் உணவு தயாரானவுடன், கோவில் வளாகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களுக்குத்தான் முதல் உணவு வழங்கப்படுகிறது.