ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்கள்

ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக் களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.

Update: 2017-07-11 10:11 GMT
டி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.

ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக் கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.

ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக் கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக் கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக் கிழமை சனிப் பிரதோஷம். அன்றைய தினம் நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.

ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.

ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் வழிபாடு கவலையைப் போக்கும்.

ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும். 

மேலும் செய்திகள்