ஆன்மிகத் துளிகள்

விளம்பரம் செய்து யாரையும் பெரியவனாக்கிவிட முடியாது. இறைவன் யாரைப் பெரியவனாக்க விரும்புகிறானோ, அவன் காட்டில் இருந்தாலும் அவனைத் தேடி எல்லோரும் வந்து விடுவார்கள்

Update: 2017-07-17 23:00 GMT
அருள்

விளம்பரம் செய்து யாரையும் பெரியவனாக்கிவிட முடியாது. இறைவன் யாரைப் பெரியவனாக்க விரும்புகிறானோ, அவன் காட்டில் இருந்தாலும் அவனைத் தேடி எல்லோரும் வந்து விடுவார்கள். புகழும் அவனை நாடி வரும். அடர்ந்த காட்டினுள்  பூக்கும் பூக்களை அறிந்து தேனீக் கள் எப்படி வருகின்றனவோ, அதைப் போல.

–ஸ்ரீராமகிருஷ்ணர்.

உயிர்

பிராணனை மனதின் தூல வடிவம் என்று கூறலாம். வாழ்வின் இறுதிவரை மனம், பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருக்கும். உடல் மரிக்கும் போது அதனைக் கவர்ந்து கொண்டு போகும். பிராணாயாமத்தைப் போலவே, மூர்த்தி தியானமும், மந்திரம் ஜெபிப்பதும், ஆகார நியமமும் மனதை அடக்க உதவி புரிகிறது.

–ரமணர்.

சக்தி

ஒரு மனிதர் மிகவும் அருமையான நடையில், சிறந்த கருத்துகளைப் பற்றிப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் அது மக் களைக் கவருவதாக இருக் காது. மற்றொருவர் பேச்சில் அழகிய மொழி, கருத்து என்ற எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய சொற்கள் கேட்பவர்களின் உள்ளங்களை கவர்கின்றன. அவருடைய ஒவ்வொரு செயலும் சக்தி வாய்ந்தவை.

–விவேகானந்தர்.

மேலும் செய்திகள்