ஆன்மிகம்
இந்த வார விசே‌ஷங்கள் : 18–7–2017 முதல் 24–7–2017 வரை

18–ந் தேதி (செவ்வாய்)குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயணசாமி தீர்த்தம். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரமாய் காட்சியளித்தல்.
18–ந் தேதி (செவ்வாய்)

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயணசாமி தீர்த்தம்.

     நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரமாய் காட்சியளித்தல்.

    நயினார்கோவில் சவுந்தரநாயகி பல்லாங்குழி ஆடி வரும் காட்சி. இரவு வெள்ளி அன்ன வாகனத்தில் புறப்பாடு.

    நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்க காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

    கீழ்நோக்கு நாள்.

19–ந் தேதி (புதன்)

    சர்வ ஏகாதசி.

    கார்த்திகை விரதம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

    நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை பெரிய சிம்ம வாகனத்திலும், இரவு சிறிய வெள்ளி கிளி வாகனத்திலும் புறப்பாடு.

    நயினார்கோவில் சவுந்தரநாயகி ராஜாங்க அலங்காரம்.

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க கேடயத்திலும் திருவீதி உலா.

    கீழ்நோக்கு நாள்.

20–ந் தேதி (வியாழன்)

    திருநெல்வேலி காந்தியம்மன் ரி‌ஷப வாகனத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி.

    திருவாடானை சினேக வள்ளியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு.

    நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்தில் புறப்பாடு. மாலை வேணுகோபாலன் அலங்காரம்.

    நயினார்கோவில் சவுந்தரநாயகி ஆடி வரும் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

    மேல்நோக்கு நாள்.

21–ந் தேதி (வெள்ளி)

    பிரதோ‌ஷம்.

    மாத சிவராத்திரி.

    நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கமல வாகனத்தில் வீதி உலா, இரவு சிவலிங்க பூஜை செய்தருளல்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் சிறிய திருவடியிலும் பவனி.

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கிலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

22–ந் தேதி (சனி)

    போதாயன அமாவாசை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சே‌ஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் காட்சியருளல்.

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க விருட்ச சேவை.

    நயினார்கோவில் சவுந்தரநாயகி கோலாட்ட அலங்காரம்.

    நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், இரவு பால குதிரை வாகனத்திலும் பவனி.

    மேல்நோக்கு நாள்.

23–ந் தேதி (ஞாயிறு)

    ஆடி அமாவாசை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.

    காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.

    மதுரை கள்ளழகர் கோவிலில் கருட சேவை.

    ஏரல் சேர்மன் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா.

    திருவாடானை சினேக வள்ளியம்மன் வெண்ணெய் தாழி சேவை.

    திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் ஐந்து கருட சேவை.

    நயினார்கோவில் சவுந்தரநாயகி வீணை கான சரஸ்வதி அலங்காரம், வெள்ளி கிளி வாகனத்தில் பவனி.

    சமநோக்கு நாள்.

24–ந் தேதி (திங்கள்)

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் பவனி வரும் காட்சி.

    நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கயிலாச வாகனத்தில் பவனி, இரவு மகிசாசூர சம்ஹார லீலை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியிலும், ரெங்கமன்னார் யானை வாகனத்திலும் திருவீதி உலா.

    மேல்நோக்கு நாள்.