திருமண பாக்கியம் தரும் தலங்கள்

வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது.

Update: 2017-07-17 23:00 GMT
வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது. எப்படிப்பட்ட கவலையாக இருந்தாலும் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன.

திருமணஞ்சேரி வழிபாடு தித்திக்கும் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சுக்ர ஷேத்திரமான ஸ்ரீரங்கம் வழிபாடும், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள்வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்வழங்கும் திருப்புல்லாணி, சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.

குருபலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். ‘வானவர்களுக்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசத்தை, குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும். ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் போன்ற இடங்  களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. மேலும் வியாழக்கிழமை சுண்டல் தானம் கொடுத்து தென்முகக் கடவுளை வழிபடுவதும் நல்லது.

மேலும் செய்திகள்