ஆன்மிகம்
பலன் தரும் பாம்புரநாதர் வழிபாடு

பாம்பு கிரகங்கள் என்று வர்ணிக்கப்படு பவர்கள், ராகுவும், கேதுவும்.
அவற்றிற்கு தனித்தனியே திருத்தலங்கள் இருப்பது போல ராகுவும், கேதுவும் சரீரமாக இணைந்து இறைவனை தரிசித்த தலம் தான் ‘திருப்பாம்புரம்’ என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடிக்கு அருகில் இந்த தலம் உள்ளது. 

(புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்தும் இது சற்று அருகாமையில் உள்ளது) ராகு-கேது பெயர்ச்சியால் நற்பலன் பெறுவோர் மேலும் நற் பலன் பெறவும், துர்பலன் பெறுவோர் அதன் கடுமையை தணித்து, கெடுதல்கள் நீங்கவும், கால சர்ப்பதோஷம், புத்திரதோஷம், களத்ர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், திருமணத் தடை ஏற் படுபவர்கள், தெரிந்தோ,

தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் என சர்ப்ப தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக திகழ்கிறது திருப்பாம்புரம். இங்கு சென்று பரிகாரம் செய்வது நல்ல பலன் தரும். திருப்பாம்புரம் சென்றால் திருப்பங்கள் உருவாகும்.