ஆன்மிகம்
ஈசனுக்குப் பிடித்த மலர்கள்

சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுவதே வழக்கம். இது தவிர சிவபெருமான் விரும்பும் மலர்களாக சில குறிப்பிடப்படுகின்றன.
சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப் படுவதே வழக்கம். அவருக்குப் பிடித்தமானதும் வில்வ இலைதான். இது தவிர சிவபெருமான் விரும்பும் மலர்களாக சில குறிப்பிடப்படுகின்றன.

சிவாலயத்தில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் அந்த மலர்கள்:- கொன்னை, வன்னி, எருக்கு, ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, செங்கழுநீர், தும்பை போன்றவையாகும். இந்த மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.