நவ கன்னிகை வழிபாடு

10 வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

Update: 2017-09-20 07:02 GMT
வராத்திரி நாட்களில் தினமும் அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்னையை நவ கன்னிகையாகவும், சில இடங் எகளில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர். 10 வயது நிரம்பாத கன்னிகையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி

மூன்றாம் நாள் 4 வயதுக் குழந்தை - கல்யாணி

நான்காம் நாள் 5 வயதுக் குழந்தை - ரோகிணி

ஐந்தாம் நாள் 6 வயதுக் குழந்தை - காளிகா

ஆறாம் நாள் 7 வயதுக் குழந்தை - சண்டிகா

ஏழாம் நாள் 8 வயதுக் குழந்தை - சாம்பவி

எட்டாம் நாள் 9 வயதுக் குழந்தை - துர்க்கா

ஒன்பதாம் நாள் 10 வயதுக் குழந்தை - சுபத்ரா

என்று ஒவ்வொரு நாளும் ஒரு பெயரில் நவ கன்னிகை வழிபாட்டை செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்