ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது ரத்தின கிரி மலை.
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது ரத்தின கிரி மலை. இதனை ஐவர் மலை என்றும் அழைப்பார்கள். இந்த ரத்தினகிரி மலையில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ஆலயம் 14–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இம்மலையில் முருகன் அருள்பாலிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும், எதிலும் நிறைந்து பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் அமைந்திருக்கும் மலையின் மீது, வேறு எங்கும் இல்லாத அதிசயமாக காகங்கள் பறப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இது சனி தோ‌ஷ நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. மேலும் இங்குள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால், சில மணித் துளிகளிலேயே அந்த அபிஷேக பால், தயிராக மாறி பக்தர்களை அதிசயிக்க வைக்கிறதாம்.