விரதமிருப்பது ஏன்?

ஆசைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம் ஏதேனும் ஒரு நாளில் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள் நம் முன்னோர்கள்.

Update: 2017-10-11 08:44 GMT
சைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம் ஏதேனும் ஒரு நாளில் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள் நம் முன்னோர்கள். அது இறைவனுக்கு உகந்த நாளாக இருப்பது உத்தமம். இதனால் இறையருளுக்கும் பாத்திரமாக முடிகின்றது; ஆரோக்கியத்திற்கு வித்திட்டு பலத்தையும் கொடுக்கின்றது.

அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால், அவை புத்துணர்ச்சியும், பலமும் பெறுகின்றன. அதனால் உடல் ஆரோக்கியம் உருவாகின்றது. வியாதிகள் வெளியேறுகின்றது. விரதம் முடிந்து உண்ணும் பொழுது குடல் உறிஞ்சிகளால் ஜீரணிக்கப்பட்டு செரிமாணம் பூரணமாக அடைந்து ஆரோக்கியம் சீராகின்றது. 

மேலும் செய்திகள்