பிரகார வலத்தில் கவனிக்க வேண்டியவை

முன்பெல்லாம் தினமும் கோவிலுக்குச் செல்வர். வழிபாடு முடித்து பிரகாரம் சுற்றி வருவர். பரிகாரத்திற்காகப் பிரகாரம் சுற்றுவதும் வழக்கம்.

Update: 2017-10-11 10:40 GMT
முன்பெல்லாம் தினமும் கோவிலுக்குச் செல்வர். வழிபாடு முடித்து பிரகாரம் சுற்றி வருவர். பரிகாரத்திற்காகப் பிரகாரம் சுற்றுவதும் வழக்கம். பிரகாரத்தையே பரிகாரம் ஆக்குவதும் வழக்கம். பிரகாரம் வரும் பொழுது, ஓம்காரம் ஒலிக்க வேண்டும். உள்மன பாரம் குறைய வேண்டும். இறைநாமம் சொன்னாலே, பலன்கள் பலமடங்கு கிடைக்கும். பிரகாரம் வலம் வரும் பொழுது மிக வேகமாக நடக்கக்கூடாது. அருகில் வருபவர்களிடம் தகாத சொற்களையும், குடும்பப் பிரச்சினைகளையும் சொல்லிக் கொண்டு வரக்கூடாது. தெய்வ சிந்தனையிலேயே வலம் வந்தால் தான் நினைத்தது நடக்கும். கோவிலை விட்டு வெளியில் வரும் போது, கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொல்லிவிட்டு, பிறகுதான் குடும்பக் கதைகளைப் பேச வேண்டும். 

மேலும் செய்திகள்