ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

மகாராஷ்டிராவின் ஷிரடி கிராமத்தில் இருக்கும் வீடுகள் எந்நேரமும் திறந்துகிடக்கின்றன.
மகாராஷ்டிராவின் ஷிரடி கிராமத்தில் இருக்கும் வீடுகள் எந்நேரமும் திறந்துகிடக்கின்றன. இந்த கிராமத்தில் இருக்கும் வீடுகளுக்கு கதவு, பூட்டு, பாதுகாப்பு பீரோ... என எதுவுமே இருக்காதாம். அடுத்த ஊர்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வெளி மாநிலங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வீடுகளை பூட்டாமலேயே சென்றுவிடுகின்றனர். இதற்கான காரணம் தான், இந்த வாரம் அதிசயமாக அமைந்திருக்கிறது.

ஷிரடி கிராமத்தையும், அங்கிருக்கும் வீடுகளையும் சனி பகவான் பாதுகாப்பதாக, கிராம மக்கள் நம்புகிறார்கள். அதனால் இந்த கிராமத்தில் கதவு, கேட், பூட்டு என எதுவுமே இருப்பதில்லையாம். அதையும் மீறி திருடினால், அதற்கான தண்டனையை சனி பகவான் கொடுத்துவிடுவார், என்ற நம்பிக்கையில் வீடுகளை திறந்து வைத்திருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தாலும், இதுவரை எந்த வீட்டிலும் திருடு போகவில்லையாம்.