ஆன்மிகம்
ஆன்மிகத் துளிகள்

எனக்கு சாவில்லை. பயமில்லை. ஜாதி பேதமும் இல்லை. எனக்குத் தாயில்லை. தந்தையில்லை. பிறப்புமில்லை. எனக்குச் சுற்றமும் இல்லை; நட்பும் இல்லை. எனக்கு குருவும் இல்லை, சீடனும் இல்லை. அறிவும் ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான்.
நான்

-ஆதிசங்கரர்.

சாரம்

உலகம் நன்மையும் தீமையும் கலந்தது. இந்த உலகத்தை ஆழ்ந்து சோதித்துப் பார்த்து, அதனுடைய சாரமான பகுதியைக் கிரகித்துக் கொள்ள வேண்டும். எஞ்சிய சாரமில்லாத பகுதியைத் தவிர்த்துவிட வேண்டும். மாம்பழத்தின் இனிப்பான ரசத்தை எடுத்துக் கொண்டு, கொட்டையை எறிந்துவிடுவது போல.

- ராமர்.

பணி

இறக்கும் வரை பணி செய்யுங்கள். நான் உங்களுடன் உள்ளேன். நான் போனபின், எனது ஆவி உங்களுடன் உழைக்கும். செல்வமும், புகழும், போகமும் சில நாட்களுக்கே. உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறந்தாலும், உண்மையைப் போதித்துக் கொண்டே செயல்புரியும் களத்தில் உயிரை விடுவது நல்லது.

-விவேகானந்தர்.