துர்க்கை அம்மன் வழிபாடு

துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, சண்டிகைதேவி சகஸ்ர நாமம் சொல்லி வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

Update: 2017-12-26 07:59 GMT
துர்க்கை அம்மனை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும். வழிபாட்டின் போது, அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு வண்ண மலர்களைக் கொண்டு அம்பாளை அர்ச்சனை செய்யலாம்.

துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, சண்டிகைதேவி சகஸ்ர நாமம் சொல்லி வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

பரசுராமருக்கு, அமரத்துவம் அளித்தவள் துர்க்காதேவி என்று புராணங்கள் சொல்கின்றன. துர்க்கையை வேண்டிக்கொள்வதால், மனம் தெளிவுபெறும். துர்க்கா தேவியின் அற்புதத்தை விளங்குவது ‘துர்க்கா சப்தசதி’. இதில் உள்ள 700 ஸ்லோகங்களையும் படிப்பதால், மனம் சிறப்பான உணர்வுகளைப் பெற்று விளங்கும். நீங்கள் வேண்டிய அனைத்தும் எளிதில் நடந்தேறும்.

ஒரு வருட காலம் துர்க்காதேவியை தொடர்ந்து வழிபட்டு வருபவருக்கு, முக்தி நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. துர்க்காதேவியை அர்ச்சனை செய்து வழிபடுபவர்களை, பாவங்கள் ஒருபோதும் அண்டுவதில்லை. 

மேலும் செய்திகள்