ஆன்மிகம்
கல்யாண முருகர்

சிறுவாபுரி தல இறைவனின் பெயர் ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்பதாகும்.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில் சென்னையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சிறுவாபுரி என்ற திருத்தலம். இங்கு சிறுவாபுரி முருகன் அருள்பாலித்து வருகிறார். இத்தல இறைவனின் பெயர் ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்பதாகும். இவர் கல்யாண முருகராக இருப்பது விசேஷமான ஒன்றாகும். இதுவும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப் பெற்ற தலம் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை வழிபாடு செய்தால், சொந்த வீடு கனவு நனவாகும் என்கிறார்கள்.