இந்த வார விசேஷங்கள் : 27-2-2018 முதல் 5-3-2018 வரை

27-ந் தேதி (செவ்வாய்) பிரதோஷம். திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் பவனி. மதுரை நன்மை தருவார் திருக்கல்யாணம்.

Update: 2018-02-27 11:13 GMT
கோயம்புத்தூர் கோணியம்மன், காரமடை அரங்கநாதர் ஆலயங்களில் திருக்கல்யாண வைபவம்.

நத்தம் மாரியம்மன் பாற்குடக் காட்சி.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ரத உற்சவம். மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (புதன்)

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி ரத உற்சவம்.

அழ்வார் திருநகரி பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் ரத வீதி உலா.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம் அருளிய லீலை.

காங்கேயநல்லூர் முருகப் பெருமான்- வள்ளி திரு மணக் காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலா.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருமலைப் பட்டணம் எழுந்தருளல்.

கீழ்நோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

மாசி மகம்.

ஹோலி பண்டிகை.

பவுர்ணமி.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.

திருெநல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் லீலை.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ேகாவில், குடந்தை சாரங்கபாணி கோவில்களில் தெப்ப உற்சவம்.

கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (வெள்ளி)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப சப்பரத்தில் சுவாமி பவனி.

காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

நத்தம் மாரியம்மன் சந்தனக் குடக் காட்சி, இரவு மின் விளக்கு அலங்கார வசந்த மாளிகைக்கு எழுந்தருளல்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தெப்ப உற்சவம்.

கோவை கோணியம்மன் இந்திர விமானத்தில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் மஞ்சள் நீராடல்.

காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.

காங்கேயநல்லூர் முருகப் பெருமான் விடையாற்று உற்சவம்.

கோவை கோணியம்மன் தீர்த்தவாரி, யாழி வாகனத்தில் அம்மன் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

சமநோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

முகூர்த்த நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்.

நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை தரிசனம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்