ஆன்மிக துளிகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம்.

Update: 2018-04-11 06:30 GMT
ஆதி பைரவர் தலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.


தனியாக முருகப்பெருமான்

கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத் தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

நெற்றிக்கண் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங் கலம் என்ற ஊர். இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

காயத்ரி மந்திரம்

வராகி அம்மனுக்கு வீரநாரி, மகாசேனா, பஞ்சமீ என பல பெயர்கள் இருக்கிறது. துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெள்ளியை மட்டுமே ஈட்டியவள். ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாக சில வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த வராகி அன்னை உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும், கருணையில் தாய்க்கு நிகரானவள். இவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை கூறி அன்னையை வேண்டினால், கேட்டவரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

வராகி காயத்ரி மந்திரம்:

‘ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்’

இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ெஜபிப்பது சிறந்தது. இதனால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும்.

வடுவுடன் சிவபெருமான்

குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.

சிவனுக்கு துளசி அர்ச்சனை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசியால் ஈசனை அர்ச்சனை செய்து வழிபட்டாள். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசியால் அர்ச்சனை நடைபெறுகிறது. திருமணப் பேறு கிடைக் கவும், பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயன்பெறுகிறார்கள். இந்த ஆலயத்தில் பிரதோஷ காலங்களில் மட்டும் இரண்டு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

தாம்புக்கயிறு துலாபாரம்

கேரள மாநிலம் திருச்சூர்- எர்ணாகுளம் சாலையில் உள்ளது திருக்கூர் என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள், தங்களின் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்ப தாக வேண்டிக்கொள்கிறார்கள். நோய் நீங்கியதும் தாம்புக் கயிறு துலாபாரம் கொடுக்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறு கோவில் மண்டபத்தில் கட்டி தொங்கவிடப்படுகின்றன.

தொகுப்பு: சி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு.

மேலும் செய்திகள்