ஆன்மிகம்
ஒரு பீடம்.. இரண்டு லிங்கம்..

ஒரே பீடத்தில் இரண்டு லிங்கம் இருப்பது காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாக உள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூரில் பரசுராமருக்கு அருளிய பரசு ராமலிங்கம் மற்றும் ஜமத்கனி முனிவருக்கு காட்சி தந்த ஜமத்கனீஸ்வரர் ஆகிய இருவரும் ஒரே ஆவுடையார் (பீடம்) மீது இரண்டு பாணங்களாக காட்சி தருகின்றனர். ஒரே பீடத்தில் இரண்டு லிங்கம் இருப்பது காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாக உள்ளது.

நெற்றிக்கண்ணுடன் அம்பாள்

பெரம்பலூரை அடுத்த தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் அம்பாளுக்கு நெற்றியில் ஒரு கண் உள்ளது. இந்த அம்மனை, ஜன்னல் வழியாக தரிசனம் செய்யலாம்.

பஞ்சமுக பைரவர்

திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாத்தய்யங்கார்பேட்டை. இந்த ஊரில் பஞ்சமுக பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் கைநழுவிப்போன சொத்துகள் கூட வந்து சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.