இந்த வார விசேஷங்கள் : 22-5-2018 முதல் 28-5-2018 வரை

22-ந் தேதி (செவ்வாய்) நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி காலை கேடய சப்பரத்திலும், இரவு காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.

Update: 2018-05-23 05:55 GMT
காளையார்கோவில் அம்பாள் கதிர் குளித்தல் தபசுக்காட்சி.

பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

சிவகாசி விசுவநாதர் பெரிய ரிஷப வாகனத்தில் வீதி உலா, அம்பாள் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம்.

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (புதன்)

ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவை.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராமர் அவதாரமாக காட்சி தருதல்.

காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாண வைபவம்.

பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.

திருமோகூர் காளமேகப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

மதுரை கூடலழகர் காலையில் பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்திலும் புறப்பாடு.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாழி வாகனத்தில் வீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (வியாழன்)

மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.

சிவகாசி விசுவநாதர் கோவில் ரத உற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதி உலா.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் இரவு தங்க கருட வாகனத்தில் பவனி.

நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி கேடயத்திலும், இரவு பூத வாகனத்திலும் திருவீதி உலா.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கமலாசனத்தில் புறப்பாடு.

காளையார்கோவில் சிவபெருமான் இரவு வெள்ளி விருட்ச சேவை.

மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

சர்வ ஏகாதசி.

திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வெள்ளி ரத உற்சவம்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனம், மாலை வேணு கோபாலர் திருக்கோலம், இரவு புன்னை மர வாகனத்தில் சுவாமி பவனி வருதல்.

காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கருட வாகன சேவை.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வெள்ளி சந்திர பிரபையில் பவனி.

சமநோக்கு நாள்.

26-ந் தேதி (சனி)

நாங்குநேரி ராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் தர்மசாஸ்தா ஆலயத்தில் வருசாபிஷேகம்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை கன்று மேய்த்த சேவை, இரவு வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் வைர சப்பரம்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்ச சேவை.

சமநோக்கு நாள்.

27-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

பிரதோஷம்.

காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை வாமன அவதாரக் காட்சி.

பழனி முருகப்பெருமான் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

சமநோக்கு நாள்.

28-ந் தேதி (திங்கள்)

வைகாசி விசாகம்.

அக்னி நட்சத்திரம் முடிவு.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி, திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

பழனி முருகன் கோவிலில் தேரோட்டம்.

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை, இரவு திருக்கல்யாணம்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

மேலும் செய்திகள்