இந்த வார விசேஷங்கள்

12-6-2018 முதல் 18-6-2018 வரை

Update: 2018-06-13 07:56 GMT
12-ந் தேதி (செவ்வாய்)

 கார்த்திகை விரதம்.

 மாத சிவராத்திரி.

 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

 சிதம்பரம் ஆவுடையார் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

 சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

 குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

 சமநோக்கு நாள்.

13-ந் தேதி (புதன்)

 அமாவாசை.

 திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

 மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

 ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி வருதல்.

 மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (வியாழன்)

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 சிதம்பரம் ஆலயத்தில் சுவாமி வீதி உலா.

 திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

 சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வெள்ளி)

 கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

 திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.

 திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

 மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (சனி)

 ரம்ஜான் பண்டிகை.

 பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

 இன்று கருட சேவை நன்மை தரும்.

 சமநோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு)

 முகூர்த்த நாள்.

 சதுர்த்தி விரதம்.

 கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

 இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

 மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

 சிதம்பரம் நடராஜ மூர்த்தி தங்க ரதத்தில் பிச்சாடனராக காட்சி தருதல்.

 சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

 கானாடுகாத்தான், திருக்கோளக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 கீழ்நோக்கு நாள். 

மேலும் செய்திகள்