இந்த வார விசேஷங்கள் : 3-7-2018 முதல் 9-7-2018 வரை

3-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

Update: 2018-07-04 07:39 GMT
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (புதன்)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (வியாழன்)


முகூர்த்த நாள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (வெள்ளி)


ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளிய பின் தங்கப் பல்லக்கில் வீதி உலா.

கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

தேவகோட்டை ரெங்கநாதர் பவனி வருதல்.

திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

சமநோக்கு நாள்.

7-ந் தேதி (சனி)


ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

இன்று கருட தரிசனம் நன்று.

சமநோக்கு நாள்.

8-ந் தேதி (ஞாயிறு)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமான் அயன உற்சவம் தொடக்கம்.

கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (திங்கள்)


சர்வ ஏகாதசி.

கார்த்திகை விரதம்.

குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்கள் உற்சவம்.

திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

சுவாமிமலை முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

கீழ்நோக்கு நாள். 

மேலும் செய்திகள்