இந்த வார விசேஷங்கள்

.

Update: 2018-08-21 10:09 GMT
21-8-2018 முதல் 27-8-2018 வரை

21-ந் தேதி (செவ்வாய்)

 திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம், தங்கப் பல்லக்கில் பவனி.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 கீழ்நோக்கு நாள்.

22-ந் தேதி (புதன்)

 பக்ரீத் பண்டிகை.

 சர்வ ஏகாதசி.

 திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை சண்முக உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரம்.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல், தங்கக் குதிரையில் பவனி.

 திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் மதுரைக்கு எழுந்தருளல்.

 ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

 திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

 கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (வியாழன்)

 முகூர்த்த நாள்.

 பிரதோஷம்.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை, சுவாமி அம்பாள் விருசபாரூட தரிசனம்.

 விருதுநகர் சொக்கநாதர் கோவில் ரத உற்சவம், இரவு ஏகாந்த சேவை.

 சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 திருப்பதி வேங்கடமுடையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

 மேல்நோக்கு நாள்.

24-ந் தேதி (வெள்ளி)

 வரலட்சுமி விரதம்.

 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வி றகு விற்ற திருவிளையாடல், சுவாமி - அம்பாள் தங்க சப்பரத்தில் பவனி.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.

 சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

 திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

 விருதுநகர் சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா.

 மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (சனி)

 ஓணம் பண்டிகை.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத் தேரில் பவனி, இரவு சப்தாவரணம்.

 திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ரத உற்சவம்.

 சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் திருபவித்திர உற்சவம் தொடக்கம்.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜர் திருமஞ்சன சேவை.

 மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (ஞாயிறு)

 பவுர்ணமி.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விருசபாரூட தரிசனம்.

 சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

 கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

 மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (திங்கள்)

 திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.

 வரகூர் உறியடி உற்சவம் தொடக்கம்.

 சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு.

 மேல்நோக்கு நாள்.

மேலும் செய்திகள்