இந்த வார விசேஷங்கள் : 11-9-2018 முதல் 17-9-2018 வரை

11-ந் தேதி (செவ்வாய்)தேரெழுந்தூர், தேவகோட்டை, மிலட்டூர், திண்டுக்கல், திருவலஞ்சுழி, உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.

Update: 2018-09-11 11:17 GMT
மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

முகூர்த்த நாள்.

திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர் ஆகிய தலங்களில் விநாயகப் பெருமான் ரத உற்சவம்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம், இரவு புஷ்பக விமானத்தில் ராம அவதாரக் காட்சி.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் வீதி உலா, சந்தனக் காப்பு, இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.

சமநோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

விநாயகர் சதுர்த்தி.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம்.

திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.

திருப்பதி ஏழுமலையப்பன், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

சமநோக்கு நாள்.

14-ந் தேதி (வெள்ளி)

ரிஷி பஞ்சமி.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் புறப்பாடு.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்தன பிரபையில் பவனி.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், ருக்மணி-சத்யபாமா சமேத கிருஷ்ணன் கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பரத்தில் திருவீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)


சஷ்டி விரதம்.

திருக்குறுக்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.

திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்தில் வீதி உலா, இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராம அவதாரக் காட்சி.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் திருவீதி உலா.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி தவழ்ந்த கண்ணன் திருக்கோலமாய் இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க சேவை.

சமநோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)


திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் பவனி.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம்.

கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு மகர கண்டி லட்சுமிகார ஆபரணங்களுடன் கருடோற்சவம்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா.

திருவகிந்திரபுரம் வேதாந்த தேசிகர் வெண்ணெய் தாழி சேவை.

சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்