ஐந்து வகை சிவராத்திரி

இன்று (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி ஆகும். சிவராத்திரியில் ஐந்து வகையான சிவராத்திரிகள் உள்ளன. அதைப் பார்ப்போம்..;

Update:2022-03-01 11:48 IST
மகா சிவராத்திரி:- மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வருவது ‘மகா சிவராத்திரி’ எனப்படும்.

யோக சிவராத்திரி:- திங்கட்கிழமை தினம் முழுமையான அமாவாசையால் நிறைவுபெற்றிருந்தால், அது ‘யோக சிவராத்திரி’ ஆகும்.

நித்திய சிவராத்திரி:- ஒரு ஆண்டில் வரும் 12 தேய்பிறை சதுர்த்தசி, 12 வளர்பிறை சதுர்த்தசி ஆகிய இருபத்து நான்கும் ‘நித்திய சிவராத்திரி’ ஆகும்.

பட்ச சிவராத்திரி:- தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி 13 நாட்கள் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு உபவாசம் இருந்து வழிபடுவது ‘பட்ச சிவராத்திரி’ எனப்படும்.

மாத சிவராத்திரி:- மாதம் தோறும் வரும் அமாவாசைக்கு முன்தினம் வரக்கூடிய சதுர்த்தசி திதியை, ‘மாத சிவராத்திரி’ என்கிறோம்.

மேலும் செய்திகள்