ஐப்பசி பெரும்பூஜை திருவிழா

முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பெரும்பூஜை திருவிழா நடைபெற்றது;

Update:2022-10-22 00:15 IST

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன் நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் மகா பெரும் பூஜை என்ற திருவிழா இப்பகுதியில் பிரசித்தி பெற்றது.

30-ம் ஆண்டு ஐப்பசி மாதம் மகா பெரும் பூஜை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து குருநாதர் சக்தியம்மா (ஆண்) இந்நாளில் மட்டும் முழு பெண் உருவத்தில் இருந்து, ஒரு கையில் அக்னி சட்டியுடன் அருள்வாக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 10 மணி நேரம் அருள்வாக்கு தொடர்ந்து நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 12 முதல் மணி முதல் அன்னதானம் நடந்தது. திருவிழாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்