அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது;
குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருமணஞ்சேரி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பால்குட திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக விக்ரமன் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு புதிய வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.