வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்;
வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை அன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, முக்கிய வீதி வழியாக சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாய நல்லூரில் உள்ள மேலமறைக்காடர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.