முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்;
நாகூர்
நாகூர் பண்டாள சாலை தெரு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பால்குட ஊர்வலம், சாமி வீதிஉலா ஆகியவை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமி வீதிஉலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.