லோக சேமார்த்த பூஜை

கடையம் அருகே கோவிலில் லோக சேமார்த்த பூஜை நடந்தது;

Update:2022-12-19 00:15 IST

கடையம்:

கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவில், அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இந்த கோவிலில் நாட்டின் நன்மைக்காக பிரார்த்தனையோடு லோக சேமார்த்த பூஜை நடைபெற்றது.

கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை அணிந்துள்ள உள்ள திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் இணைந்து பிரார்த்தனை, பஜனை வழிபாடு நடத்தினர்.

அப்போது பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்தில் சாமி ஆடினர். நெல்லை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்