திருத்தளிநாதர் கோவிலில் பிரதோஷ விழா

திருத்தளிநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.;

Update:2022-08-24 23:15 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி மாலை 4 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் பக்தர்களின் ஹர ஹர, சிவ, சிவ கோஷம் முழங்க கோவிலின் மூன்று சுற்று பிரகாரமும் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய்விளக்கேற்றியும் வழிபட்டனர்.

இதேபோல் புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலிலும், ஆதி திருத்தளிநாதர் கோவிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்