பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு;

Update:2022-12-22 00:15 IST

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. . பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சிவபெருமான்-நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்