தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதி மேல ராஜவீதி சந்திப்பிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும், விநாயகர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.