திருச்சிற்றம்பலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருச்சிற்றம்பலம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு;
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புராதனவனேஸ்வரர் கோவில்
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வர் கோவிலில் 50-வது ஆண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெரிய நாயகி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆடிப்பூர விழா குழுவினர் செய்திருந்தனர்.
பாலத்தளி துர்க்கை அம்மன்
திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதேபோல் செருவாவிடுதி போத்தி அம்மன் கோவில், களத்தூர், ஆவணம் புனல்வாசல் ஆகிய இடங்களில் உள்ள முத்து மாரியம்மன் கோவில்கள் ஆகியவற்றிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.