சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தஞ்சை ஸ்டேட் பேங்க் காலனி சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது;

Update:2022-12-25 02:30 IST

தஞ்சாவூர்;

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்டேட் பேங்க் காலனியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. அனுமன்ஜெயந்தியையொட்டி இக்கோவிலில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சன்னதியில் சிறப்பு திருமஞ்சனம், மற்றும் விடையாற்றி விழா நடந்தது. மேலும், சன்னதியில் சுந்தரகாண்ட பாராயணம் வாசிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெயவீர ஆஞ்சநேயருக்கு கோவில் அர்ச்சகர் கார்த்திக்சுதர்சன் தீபாராதனை காண்பித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்