கோவில் கொடை விழா

திருச்செந்தூர் வீரமாகாளி அம்மன் கோவில் கொடை விழா;

Update:2022-07-21 16:40 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வீரமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனையும், 18-ந்தேதி இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. 19-ந் தேதி கொடை விழாவை முன்னிட்டு, கோவில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கும்பம் வீதி உலாவும், இரவு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.

ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாய தலைவர் லெட்சுமணன் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்