வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஜோடுகுண்டுபள்ளத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பையனப்பள்ளி ஊராட்சி ஜோடுகுண்டு பள்ளம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 1-ந் தேதி மாலை கங்கா பூஜை, கணபதி பூஜை, ரக்சா பந்தனம் ஆகியவை நடந்தது. 2-ந் தேதி காலை யாக சாலை கலச பிரதிஷ்டை, பூர்ண கும்ப பிரதிஷ்டை, கணபதி ஹேமம், நவகிரக ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலையில் துர்கா ஹோமம், லட்சுமி, ருத்ரா ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூஜைகள் நடந்தன. நேற்று காலை கணபதி ஹோமம், நட்சத்திர ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்களாரத்தி நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.