வேப்பமரத்து மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா;பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

வேப்பமரத்து மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.;

Update:2022-12-28 04:48 IST

ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரில் பிரசித்தி பெற்ற வேப்பமரத்து மாரியம்மன் மற்றும் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

ஜனவரி மாதம் 3-ந்தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 4-ந்தேதி கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து வழிபடுகிறார்கள். 5-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 6-ந்தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்