பெண்கள் பூந்தட்டு ஊர்வலம்

முக்கூடல் கோவிலில் ஆனி திருவிழா: பெண்கள் பூந்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்;

Update:2022-07-10 02:36 IST

முக்கூடல்:

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான நேற்று பகலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பெண்கள் பூந்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவில் அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்