கிரிக்கெட்
போட்டி நடந்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

தென்னாப்பிரிக்காவில் போட்டி நடந்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் பலியானார்.

கேப்டவுன்

தென் ஆப்பிரிக்காவில் வாஷூலு, நடால் என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது, கடுமையான மின்னல் தாக்கியது. அதில் மாரிட்ஷ்பர்க் யுனைடெட் கால்பந்து கிளப் அணி வீரர்கள் 3 பேர் உடலில் தீக்காயங்களுடன் பாதிக்கப் பட்டு மயக்கம் அடைந்தனர்.

அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில்  அணியின் கேப்டன் லுயாண்டா நிஷான்கேஸ் என்பவர் ‘கோமா’ நிலைக்கு சென்றார். இங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக  இறந்தார்.