கிரிக்கெட்
ஐ.பி.எல் கிரிக்கெட்; மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தோ்வு

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தோ்வு செய்துள்ளது. #IPL2018
மும்பை,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று பகல்-இரவு  ஆட்டமாக நடக்க இருக்கும் போட்டியில் ரோகித் ‌ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த 37வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. மேலும், மும்பை அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் இருக்கிறது. ‘பிளே-ஆப்ஸ்’ வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதன் பின்னா் கொல்கத்தா அணியும் மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா்.