கிரிக்கெட்
பெங்களூரு அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் நிர்ணயம் செய்தது

பெங்களூரு அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயம் செய்து உள்ளது. #SRHvRCB


ஐதராபாத்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி இன்றையை போட்டியை எதிர்க்கொள்கிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷ்கர் தவான் மற்றும் அலெக்ஸ் களமிறங்கி விளையாடினர். 2 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 14 ரன்களை எடுத்து இருந்தது. ஷகர் தவான் 7 ரன்களுடனும், அலெக்ஸ் 5 ரன்களுடனும் விளையாடினர். 

இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள், ஆனால் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் சவுதி விடவில்லை, அலெக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 5.5 வது ஓவரில் தவான் 13 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஐதராபாத் அணியில் களமிறங்கியவர்களில் வில்லியம்ஸன் (56 ரன்கள்) மற்றும் ஷாகிப் அல் ஹாசன் (35 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட் ஆனார்கள். மற்றவர்கள் சொல்லும்படியாக ரன் எதுவும் எடுக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 10 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து இருந்தது. பெங்களூரு அணிக்கு 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.