கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் : மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.கொல்கத்தா–மும்பை மோதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 41–வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு, சென்னை அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய கொல்கத்தா அணி, மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.ஹர்திக் பாண்ட்யா ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. கடைசியாக பெங்களூரு அணியிடம் தோல்வி கண்ட மும்பை அணி அடுத்து வரிசையாக பஞ்சாப், கொல்கத்தா அணிகளை சாய்த்து வெற்றி கண்டது.மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், இவின் லீவிஸ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் நிலையற்றதாக உள்ளது. அவர் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். ஆல்–ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சிலும் கலக்கி வருகிறார். அவர் இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.சுனில் நரின் கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த லீக் ஆட்டத்தில் பின்வரிசையில் களம் இறங்கிய சுனில் நரின் பேட்டிங் ஏமாற்றம் அளித்தது. ஆனால் பந்து வீச்சில் அவர் நன்றாக செயல்பட்டார். ஆந்த்ரே ரஸ்செல் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் சிறப்பு சேர்த்தார். சுனில் நரின் அதிரடி பேட்டிங் கொல்கத்தா அணிக்கு வலு சேர்ப்பதாகும்.மும்பை அணிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகக்கூடும். எனவே வெற்றிக்காக மும்பை அணி கடுமையாக போராடும். மும்பையிடம் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு சொந்த மண்ணில் பழிதீர்க்க கொல்கத்தா அணி முழு வீச்சில் செயல்படும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.மும்பை ஆதிக்கம் தொடருமா? கொல்கத்தா அணிக்கு எதிராக இதுவரை மும்பை அணி அதிக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 17 முறையும், கொல்கத்தா அணி 5 தடவையும் வெற்றி கண்டுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.