கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இங்கிலாந்து தொடர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூன்) 13–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது.இதனை அடுத்து ஜூன் 1–ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்கிறது. 3–வது அணியாக பாகிஸ்தான் கலந்து கொள்கிறது.ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு டிம் பெய்ன் கேப்டன் இந்த இரண்டு போட்டி தொடர்களுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஒருநாள் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், 20 ஓவர் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்சும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் நிரந்தர கேப்டன் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜே ரிச்சர்ட்சன், கனே ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆன்ட்ரூ டை.20 ஓவர் அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டன் ஆஸ்திரேலிய 20 ஓவர் அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், டிராவிஸ் ஹெட், நிக் மேடின்சன், மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கனே ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் வெப்சன், ஆன்ட்ரூ டை, ஜாக் வில்டெர்முத்.