ஐபிஎல் கிரிக்கெட்: ரன்மழை பொழிந்தது மும்பை, கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 210 ரன்களை குவித்துள்ளது. #MI #KKR #IPL

Update: 2018-05-09 16:33 GMT
கொல்கத்தா, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  நடைபெற்று வரும் 41–வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

 இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (36 ரன்கள்), எவின் லெவிஸ் (18 ரன்கள்) ரோகித் சர்மா (36 ரன்கள்) என கணிசமான பங்களிப்போடு பெவிலியன் திரும்பினர். 

கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இஷான் கிஷான் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 62 ரன்கள் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இவருக்கு பிறகு வந்த வீரர்களான ஹர்திக் பாண்ட்யா (19 ரன்கள்), பென் கட்டிங் (24 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக  பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. 

மேலும் செய்திகள்